இஸ்ரேலிய நடவடிக்கைகளைத் தடுக்க உலகளாவிய முயற்சிகள் தோல்வியடைந்ததால், காஸாவிலும், மேற்குக் கரையிலும் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், பாலஸ்தீனியர்கள் தங்கள் காலத்தின் “மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவை” எதிர்கொள்கின்றனர் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
காஸாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள், உதவி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது ,உணவு,ம் மருத்துவப் பொருட்களில் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்த கட்டுப்பாடுகளை விதிப்பது “ஒரு போர்க்குற்றம்” ஆகும், இதற்கு இஸ்ரேல் “முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் ” என்று அப்பாஸ் அதிகாரப்பூர்வ பாலஸ்தீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் கூறினார்.
பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நிராகரித்த அப்பாஸ்,காஸாவில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தம், மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்குதல் , காஸாவில் பாலஸ்தீனிய அதிகாரத்தை மீட்டெடுப்பதை வலியுறுத்தினார்.