கலவரத்தால் கடந்த இரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், முதல்வர் பதவி வகித்து வந்த பைரன் சிங் மிக மிக நீண்ட தாமதத்திற்குப் பின்னர் பதவி விலகியதால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது. இனி மணிப்பூர் மாநில நிர்வாகத்தை ஆளுநர் கவனிப்பார். மணிப்பூரில் இனக் கலவரம் வெடித்து மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய அளவிலான பொருட் சேதத்தையும் அந்த மாநிலம் கண்டுள்ளது.
கலவரத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் பைரன் சிங் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனாலும் பைரன் சிங் விலகவில்லை. இந்த நிலையில் பைரன் சிங் கலவரத்தைத் தூண்டி விட்டுள்ளதாக கூறி ஆடியோ ஆதாரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டிருந்தது.