மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதிபகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (29) தீடிரென தீ பரவியதையடுத்து அங்குள்ள பனைரங்கள் , மரங்கள் ந்ந்ன்பன தீப்பிடித்து எரிந்தன. மட்டு நாகரசபை தீயணைப்பு படடையினரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்
இன்று பகல் 12.00 மணியளவில் அந்த பகுதியிலுள்ள புல் தரைகளில் தீபற்றி பரவத் தொடங்கிய தீ பனை மரங்கள் , மரங்களில் பற்றியதுடன் புகையிரத எஞ்சின் திரும்பும் பகுதி ,புகையிரத பெற்றோல் தாங்கி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பதியை நோக்கி தீ பரவத் தொடங்கியது.
இதனையடுத்து மாநகரசபை முதல்வர் சிவன் பாக்கியநாதன், உறுப்பினர்கள்
தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் சுமார் 2 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்தனர்.
