மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடியில் இரயில் தண்டவாளத்தில் நின்று கைதொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது இரயில் மோதியதில் 23 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் கரிகரராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்மனைவியுடன் ஏற்பட்ட சண்டையினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டு மனைவியுடன் தொலைபேசியில் பேசி சண்டைபிடித்துக் கொண்டுள்ள நிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இரயிலில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்