Sunday, February 1, 2026 5:20 pm
நேபாளத்தின் கீர்த்திபூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குளோபல் தகுதிச் சுற்றுப் போட்டியில் தாய்லாந்தை 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரவிருக்கும் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட அயர்லாந்து தகுதி பெற்றது.
குரூப் பி-யில், ஸ்கொட்லாந்து அணி நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றது, முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த பிறகுஸிம்பாப்வே, தாய்லாந்து , நேபாளம் ஆகியவற்றை வீழ்த்தியது.
நெதர்லாந்து, பங்களாதேஷ், அயர்லாந்து , ஸ்கொட்லாந்து ஆகியவை தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்று – இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் இலங்கை ஆகியவற்றுடன் இணைகின்றன.
ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இங்கிலாந்து ,வேல்ஸ் ஆகியன இணைந்து நடத்துகின்றன.

