Friday, June 13, 2025 9:25 am
மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், காஸாவில் உடனடி, நிபந்தனையற்ற ,நீடித்த போர் நிறுத்தத்தை கோரும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது.
ஜூன் 12 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம், பணயக்கைதிகள் விடுதலை, கட்டுப்பாடற்ற உதவி அணுகல், காசா முற்றுகையை நீக்குதல் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றையும் கோருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் எதிராக வாக்களித்தன, அதே நேரத்தில் இந்தியா உட்பட 19 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

