போக்குவரத்து பொலிஸார் மட்டுமே போக்குவரத்தை சீர்செய்வார்கள். ஆனால், சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில், ஒரு ரோபோ போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘குட்டிப் புலி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவின் செயல்பாடுகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
இந்த ரோபோவுக்கு பயிற்சி அளித்துள்ள ஷாங்காய் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், இது தற்போது சோதனை முறையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ரோபோவின் செயல்பாடு வெற்றிகரமாக இருந்தால், எதிர்காலத்தில் போக்குவரத்து ரோபோக்களை நிரந்தரமாக பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்த ரோபோ, போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து எச்சரிக்கை செய்வது, போக்குவரத்து சமிக்ஞைகளை வழங்குவது, பாதசாரிகளுக்கு உதவுவது என பல பணிகளை செய்யும் திறன் கொண்டது. இந்த ரோபோவின் வருகை, போக்குவரத்து காவலர்களின் பணிச்சுமையை குறைத்து, சாலை பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- இரயில் டிக்கெட் மோசடி தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் அமைச்சர் – பிமல்
- இராவணன் மறைத்துவைத்த விமானங்களை தேடும் முயற்சி ஆரம்பம்
- கொழும்பில் 20வது சர்வதேச இரட்டையர் ஆய்வு சங்க மாநாடு
- மட்டக்களப்பில் இரயில் மோதி இளைஞன் பலி
- சுற்றுலா சாரதி உரிமத் திட்டம் உள்ளூர் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது – நாமல்
- வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உதவி திட்டம் முன்னெடுப்பு
- மொரட்டுவையில் ஆறு குழந்தை தொழுநோயாளிகள் கண்டுபிடிப்பு
- ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தர பதவி நீக்கம்