முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து, வியாழக்கிழமை (11) வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர சென்றனர்.
இந்நிலையில் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
“போகச் சொன்னார்கள் போகின்றோம். ஆனால், அரசியலில் இருந்து போகமாட்டோம். அனுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்” என்றார்.