பாங்கொங் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரைக் கடித்த பூனை கைது செய்யப்பட்டுள்ளது.
நப் டாங் என்று பெயரிடப்பட்ட அமெரிக்க ஷார்ட்ஹேர் பூனை கடந்த மே 9 19 ஆம் திகதி வீதியில் சுற்றியபோது அதனைக் கண்டுபிடித்த ஒருவர் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக பொலிஸ் நிலையத்தில் கொடுத்தார்.
சமூக ஊடகங்களில் இந்த பூனை குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட அதிகாரி டா பரிந்தா பக்கீசுக், பூனைக்கு உணவும், பொருட்களும் கொடுத்து பராமரித்தார்.
ஆனால், அந்தப் பூனை பல பொலிஸாரைக் கடித்து விறாண்டியது.
அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறி அதன் மீது வழக்கு பதிவு செய்ததாக பொலிஸ் அதிகாரி இதை நகைச்சுவையாக பேஸ்புக்கில் பதிவிட்டார்.
அந்தப் பூனையைத் தத்தெடுக்கபலர் கோரிக்கை விடுத்தனர். உரிமையாளருடன் மீண்டும் பூனையை இணைப்பதே தங்கள் விருப்பம் என பொலிஸார் தெரிவித்தனர்.உரிமையாளரிடம் பூனையை ஒப்படைத்த பொலிஸார் அதனை பிணையில் விடுதலை செய்ததாகப் பதிவிட்டனர்.