நடப்பு சீசனின் இறுதியில் பேயர்ன் முனிச்சிலிருந்து விலகுவதாக மூத்த மிட்ஃபீல்டர் தாமஸ் முல்லர் அறிவித்துள்ளார். கால்பந்து கிளப்புடனான 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.
35 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்காத கிளப்பின் முடிவுக்கு மரியாதை அளிப்பதாக தெரிவித்தார்.
சிறந்த ஜேர்மன் கால்பந்து வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் முல்லர், 2000 ஆம் ஆண்டில் பேயர்னின் இளைஞர் அகாடமியில் சேர்ந்தார்.2008 இல் சீனியர் அணியில் தனது அறிமுகத்தைத் தொடங்கினார்.
2010 முதல் பேயர்ன் முனிச் கிளப்பின் வெற்றியில் தாமஸ் முல்லர் முக்கிய வீரராவார். . அவர் பேயர்ன் முனிச்சிற்காக 743 போட்டிகளில் பங்கேற்று 247 கோல்களை அடித்துள்ளார்.
தனது சிறப்பு வாய்ந்த கால்பந்து வாழ்க்கையில், முல்லர் பேயர்னுடன் 33 பட்டங்களை வென்றுள்ளார், இதில் 12 பன்டெஸ்லிகா சம்பியன்ஷிப்புகள் மற்றும் இரண்டு UEFA சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் அடங்கும்.
சர்வதேச அளவில், ஜேர்மனியின் 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.