Wednesday, February 18, 2026 8:46 am
சீன தொழிலதிபர்களுடனான இரகசிய சந்திப்புகள் தொடர்பான அரசியல் ஊழலுக்குப் பிறகு, பெருவின் இடைக்கால ஜனாதிபதி “வெளிப்படையான பதவி நீக்க நடவடிக்கையில்” பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் .நான்கு மாதங்கள் மட்டுமே தலைவராக இருந்த ஜோஸ் ஜெரியை நீக்குவதற்கு ஆதர்வாக 75 பேரும், எதிராக 24 பேரும் வாக்களித்தனர்.
அவர் தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே சீன தொழிலதிபர்களுடன் இரகசிய சந்திப்புகளில் ஈடுபட்டதைக் காட்டும் பாதுகாப்பு கேமரா காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் “சிஃபாகேட்” என்று அழைக்கப்படும் ஒரு ஊழலில் சிக்கினார். ஒரு முறை அவர் தனது அடையாளத்தை மறைக்க முயற்சிப்பது போல் தோன்றியது.
39 வயதான ஜெரி, 2016 முதல் பெருவின் எட்டாவது ஜனாதிபதியாக இருந்தார் .ஜனாதிபதி மாளிகையில் இரவு நேரக் கூட்டங்களுக்குப் பிறகு அரசு வேலைகளைப் பெற்ற தகுதியற்ற இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்காகவும் ஜெரி விசாரணையை எதிர்கொள்கிறார், இது அதன் அதிகாரப்பூர்வ நுழைவு மற்றும் வெ

