யார் பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
நான் திராவிடத்தில் இருந்து வந்தவன். இப்பொழுது தெளிவு பிறந்ததால் எதிர்க்கிறேன். ஏனெனில் அவர்களது கொள்கைக்கானவர்கள் அல்ல. நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். பெரியாரைப் படித்து விட்டு பேசுகிறேன். என் கேள்விக்கு தான் பதில் சொல்ல வேண்டும்.
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால் வரிகொடா இயக்கம் நடத்துவோம். ஆங்கிலேயர் ஆட்சியில் தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இப்போது நடத்த முடியாமல் போய்விடுமா என்ன? பெரியார் என்பது எங்களுக்கு தேவையில்லை. உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன்.