Saturday, February 7, 2026 9:30 am
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் பெப்ரவரி 19 , 20ம் திகதி வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிவைசிங் கமிட்டியில் இராணுவ அதிகாரி ஒருவர் படத்தை பார்த்து ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ஒருவேளை அவர் ஆட்சேபனை தெரிவித்தால் அந்த காட்சிகள் நீக்கவோ அல்லது ப்ளர் செய்யப்படலாம் என்கின்றனர்.
ஜனநாயகன் வழக்கு விசாரணை என்ன ஆனது? என ரசிகர்கள் ஒரு பக்கம் தலையை பிய்த்துக் கொண்டிருக்க பெரும் தொகையை முதலீடாக போட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் செம சைலண்ட்டாக படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக கூறுகின்றனர். இதை முன்பே செய்திருந்தால் பொங்கலுக்கே ஜனநாயகன் வெளியாகி இருக்குமே என்றும் கோலிவுட்டில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. ஜனநாயகன் படத்துக்கு ஓரிரு நாளில் தணிக்கை சான்று வழங்கப்பட்டால் திட்டமிட்டபடி படத்தை பெப்ரவரி 20ம் திகதி கேவிஎன் நிறுவனம் ரிலீஸ் செய்து விடுவார்கள் என்கின்றனர்.

