விவசாயம், வனவியல் ,சுற்றுலா போன்ற துறைகளை மேம்படுத்துவதர்காக இரண்டு புதிய வேலை விஸாக்கள் டிசம்பரில் அறிமுகம் செய்யப்படும் என என்று நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது.
கிராமப்புற ஒப்பந்ததாரர்கள், வைன் தயாரிக்கும் ஊழியர்கள் சேர்லிஃப்ட் இயக்குநர்கள் போன்றவர்களுக்கு மூன்று ஆண்டு உலகளாவிய பணியாளர் பருவகால விஸாவை குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் Q+A இல் அறிவித்தார்.
இந்த விஸா சிறப்பு தேர்ச்சியுடன் மிகவும் திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாக ஸ்டான்போர்ட் கூறினார்.
இந்த விஸா உள்ளவர்கள் மூன்று வருட காலத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நியூசிலாந்திற்குள் நுழைய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.