வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை பெப்ரவரி 2 ஆம் திகதி தளர்த்தியதிலிருந்து இன்று இலங்கைக்கு வாகனக் கப்பல் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புதிய வாகனங்களும் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், காத்திருப்புப் பட்டியலும் இப்போது நடந்து வருவதாகவும் தெரிய வருகிறது.
தற்போதைய விலைகள் அதிகமாக இருந்தாலும் முன்பதிவுகளுக்கான தேவை அதிகமாக இருக்கின்றன .
தாய்லாந்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு இன்று முதல் வாகனங்களை அனுப்பும் அதே வேளையில், ஜப்பானில் இருந்து மற்றொரு வாகனம் வியாழக்கிழமை (27) அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ், அறிவித்தார்.
புதிய வாகனங்களின் வருகையைத் தொடர்ந்து, நாட்டில் தற்போதுள்ள இரண்டாவது கை வாகன சந்தை 10 முதல் 15 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மேனேஜ் கூறினார்.சில வாகன வகைகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றாலும், மற்றவை உள்ளூர் சந்தையில் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய இறக்குமதிகளுடன் சுசுகி வேகன் ஆர் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தம் புதிய சுசுகி வேகன் ஆர் ரூ. 7 மில்லியன் முதல் ரூ. 7.2 மில்லியன் வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் மற்ற வேகன் ஆர் மாடல்கள் ரூ. 6 மில்லியன் , ரூ. 7 மில்லியன் ஆக இருக்கும்.
ஜப்பானிய ஆல்டோவின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, புதிய இறக்குமதிகள் ரூ. 3.5 மில்லியன் முதல் ரூ. 5 மில்லியன் வரை இருக்கும்.
தாய்லாந்திலிருந்து அனுப்பப்படும் வாகனங்களில் இரட்டை கேப் வாகனங்கள் அடங்கும், அவை கொழும்பு துறைமுகத்திற்கு வரும். அதன்படி, டொயோட்டா ஹிலக்ஸ் ரோக்கோ டபுள் கேப் இலங்கையில் ரூ. 24.5 மில்லியன் முதல் ரூ. 25.5 மில்லியன் வரையிலான விலை வரம்பில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.