புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் வரும் 31 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெறவுள்ளது.
உளவியல் மற்றும் உளவளத் துணை விஞ்ஞான மாணி பட்டபடிப்பு மாணவியும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் செயலாளருமான திருமதி பிரியதர்ஷினி விக்கினேஸ்வரன் இக் கவியரங்கிற்கு தலைமையை ஏற்கிறார்.
திறந்த நிகழ்வாக நடைபெறவுள்ள இந்த அமர்வில் கலந்துகொண்டு தமது கவித்திறமைகளை வெளிக்கொணர விரும்புவோர் அன்றைய தினம் நேரில் கலந்து கொள்ள முடியும். மேலதிக விபரங்களை பெற 075 4880172 என்ற அலைபேசி, வட்சப் உடன் தொடர்பு கொள்ளலாம்
Trending
- டயனா கமகேவிற்கு ஒரு கோடி ரூபாய் சரீர பிணை
- ரணிலுக்காக ஒன்றுகூடிய எதிர்க்கட்சியினர்
- பூண்டுலோயா லயன் குடியிருப்பில் தீ விபத்து : 10 வீடுகள் சேதம்
- காஸா மருத்துவமனையில் தாக்குதல்: 3 பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேர் பலி
- பொலிஸில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை
- ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கி அழித்த உக்ரைன்
- பண்டாரவன்னியனின் 222ஆவது ஞாபகார்த்த விழா
- நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள்