புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினமான 8 ஆம் திகதி செட்டியார் தெரு இலக்கம் 292 இல அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் காலி 8 மணிக்கு மகளிர் தின கொண்டாட்டம் நடைபெறும்.
பெண்களின் மேம்பாட்டுக்கு மட்டுமின்றி சமூக மேம்பாட்டுக்காக உழைத்து வரும் மூத்த ஆளுமைகளில் ஐந்து பெண்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு “வீரவனிதை’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவிக்கப்படும்.
பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த 10பேருக்கு உலர்உணவு பொருள்கள் அடங்கிய பொதிகளை வழங்கவுள்ளோம். “கிளின்ஸ்ரீலங்கா’ திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு சேலை மற்றும் உதவி பொருளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இளம்பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப்போட்டி ஒன்றும் அன்றைய தினம் நடைபெறும். பேச்சு, நடனம் மற்றும் பாடல் இசைக்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக அமைப்பின் தலைவி ரஞ்சனி சுரேஸ், செயலாளர் பிரிய தர்ஷனி விக்கினேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.
அமைப்பின் நிறுவனர் ராதாமேத்தா, முக்கியஸ்தர் சண்மும் ஆகியோரின் வழிகாட்டலில் இவை நடைபெறும்.