தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக, கொலம்பியா , ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கு எதிரான உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அனுபவ வீரர் நெய்மர் விளையாட மாட்டார் என்று பிறேஸில் உதைபந்தாட்டக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.நெய்மருக்குப் பதிலாக முன்கள வீரர் எண்ட்ரிக் சேர்க்கப்பட்டுள்ளார்.
20 ஆம் திகதி பிரேசிலியாவில் கொலம்பியாவையும், ஐந்து நாட்களுக்குப் பிறகு பியூனஸ் அயர்ஸில் ஆர்ஜென்ரீனாவையும் பிறேஸில் சந்திக்கும்.
பிறேஸில் அணியில் எடர்சன் , ஃபிளமெங்கோ வலது-பின் டானிலோ ஆகியோருக்குப் பதிலாக லியோன் கோல்கீப்பர் லூகாஸ் பெர்ரி , ஃபிளமெங்கோ டிஃபென்டர் அலெக்ஸ் சாண்ட்ரோ ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிறேஸிலுக்காக 13 முறை விளையாடியுள்ள எண்ட்ரிக், மூன்று கோல்களை அடித்துள்ளார், இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்காக 28 போட்டிகளில் விளையாடி ஆறு முறை கோல்கள் அடித்துள்ளார்.