தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயார் அம்சவேணி காலமானார். அவருக்கு வயது 85. அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு பூத் முகவர்கள் கூட்டத்திற்கு சென்ற பிரேமலதாவும் சுதீஷும் சென்னைக்கு விரைகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தம்பி எல்.கே.சுதீஷ். இவரும் சினிமா, அரசியல் என்று தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதாவுக்கும் சுதீஷுக்கும் இந்த தகவல் தெரியவந்ததும் அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை இரத்து செய்துவிட்டு திரும்பி வருகிறார்கள். பிரேமலதாவின் வீட்டில் நடந்த துக்க சம்பவத்தை அடுத்து தேமுதிக தொண்டர்கள் அந்த பகுதியில் கூடி வருகிறார்கள். குடியாத்தத்தில் வளர்ந்த பிரேமலதாவை விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டார். அவர் சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் நடித்து வந்த போதே இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹனிமூன் கூட சூட்டிங் சென்ற இடத்தில் சென்றதாக ஒரு முறை பிரேமலதா தெரிவித்திருந்தார்.