தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பை நடிகரின் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்ததாகவும், அவர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் கூட்டணி, தேர்தல் பிரசாரம் மற்றும் திட்டங்கள் குறித்து இருதரப்பும் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் உள்ளன. விஜய், தற்போது புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து, ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.சமீபத்தில் கட்சியில் சமீபத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணிக்குள்விஜய்யின் கட்சியை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகின.