பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.கல்பனா தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக நம்பப்படுகிறது. தகவல்களின்படி, அவர் தனது வீட்டில் மயக்கமடைந்து காணப்பட்டார்.தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது கல்பனா வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் கண்கணிப்பில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்பனா இரண்டு நாட்களாக கதவைத் திறக்காததால், அவரது அண்டை வீட்டார் பொலிஸுக்கு அறிவித்தனர். பொலிஸார் வீட்டின் கதவை உடைத்து பார்க்கையில் கல்பனா மயக்க நிலையில் இருந்ததை கண்டுள்ளனர். அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர்.
Trending
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
- விசாரணைக் குழு முன் ஆஜரானார் தேசபந்து தென்னகோன்
- முக்கிய விவாதங்களுடன் நாளை பாராளுமன்றம் கூடுகிறது
- தெஹிவளையில் சற்று முன் துப்பாக்கிச் சூடு