“பாலஸ்தீன பீலே” என்று அழைக்கப்படும் உதைபந்தாட்ட வீரர் எப்படி இறந்தார் என்பதை UEFA வெளியிடாததற்காக லிவர்பூல் ஃபார்வர்ட் மோ சலா, சமூக ஊடகப் பதிவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விமர்சித்துள்ளார்.
புதன்கிழமை தெற்கு காஸா பகுதியில் மனிதாபிமான உதவிக்காகக் காத்திருந்தபோது, “பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில்” 41 வயதான சுலைமான் அல் ஒபெய்ட் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன உதைபந்தாட்ட சங்கம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
“அவர் எப்படி இறந்தார், எங்கே, ஏன் இறந்தார் என்று சொல்ல முடியுமா?” என்று தீவிர முஸ்லிமான எகிப்திய முன்னோடி சலா , கேள்வி எழுப்பி உள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு வருட காலப் போரில் காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சலா வாதிட்டார்.
பாலஸ்தீன உதைபந்தாட்டச்சங்கம் தனது வலைத்தளத்தில் அஞ்சலி செலுத்தும் விதமாக, அல் ஒபெய்டுக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் இருப்பதாகக் கூறியது.
அவர் காஸாவில் பிறந்தார் என்றும், காஸா மேற்குக் கரையில் உள்ள கிளப்புகளுக்காக விளையாடினார் என்றும் அது மேலும் கூறியது.