செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி புதன்கிழமை தெரிவித்தார்.
பாலஸ்தீன அதிகாரசபையின் சீர்திருத்தங்களுக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட நடவடிக்கை இது என்று கார்னி செய்தியாளர்களிடம் கூறினார். அதில், அதன் நிர்வாகத்தை அடிப்படையில் சீர்திருத்துவது,2026 இல் பொதுத் தேர்தல்களை நடத்துவது ஆகியவை அடங்கும். இதில் ஹமாஸ் எந்தப் பங்கையும் வகிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.