ஒரு மாதத்திற்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை கிராமத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இரவு முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையம் உறுதிப்படுத்தியது.
பாலஸ்தீனிய ஆட்சேர்ப்பு ஏஜென்ட்களால் போலி வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு, அல்-சாயெம் கிராமத்திற்கு வந்தவுடன் தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் மீட்பு நடவடிக்கையை உறுதிப்படுத்தியது.
மேலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.