அனுரவின் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை [31] கல்வி அமைச்சில் நடைபெற்றது.
சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை ,நெறிமுறை குணங்களை வளர்ப்பது போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தொடர் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் நோக்கங்களை விளக்கி, தனது கருத்துக்களை தெரிவித்தார்.
திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவையான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்கள் ஜி. எம். ஆர். டி. அபோன்சோ, எச். எம். கே. ஜே. பி. குணரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரந்த மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சியில், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவும் பங்குபற்றின.
Trending
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
- 24 மணி நேர கடவுச்சீட்டு சேவை நிறுத்தம்
- ஊழலற்ற மக்களாட்சியை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னம் வழங்கும்