தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் உள்ள ஒரு பிரபலமான உணவு சந்தையில் திங்கட்கிழமை நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் நான்கு பாதுகாப்பு காவலர்கள் உட்பட குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் பாங்காங்கின் பேங் சூ மாவட்டத்தின் துணை காவல்துறைத் தலைவர் வோராபட் சுக்தாய் தெரிவித்தார்.
தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையிலான சமீபத்திய எல்லை மோதல்களுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை செய்வதாகவும் அவர் கூறினார்.