Monday, January 26, 2026 5:39 pm
மைனேயின் பாங்கூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு பேரை ஏற்றிச் சென்ற தனியார் விமானம் புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதாக இங்கிலாந்தின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாம்பார்டியர் சேலஞ்சர் 600 விமானம் இரவு 7:45 மணியளவில் விபத்துக்குள்ளானது, அதில் இருந்தவர்களின் நிலைமை குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.FAA , தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.
நியூ இங்கிலாந்து , உட்பட நாட்டின் பெரும்பகுதி கடுமையான குளிர்காலப் புயலால் பாதிக்கப்பட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பகுதிகளுடன் சேர்ந்து பாங்கூரிலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
விமான நிலையத்தில் அவசரகால குழுவினர் சம்பவ இடத்தில் இருப்பதாக விமான நிலையம் அறிக்கையை வெளியிட்டது, விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் புறப்பட்ட சம்பவம் என்று விவரிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டது.

