Saturday, February 7, 2026 4:47 pm
ரி20 உலகக்க்கிண்ணப் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமானது எஸ் எஸ் சி மைதானதில் நெதர்லாந்துக்கு எதிரக நடைபெற்ற முதலாவது போட்டியில் போராடி வெற்றி பெற்றது பாகிஸ்தான். முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது. 19.3 ஓவர்களி, 7 விக்கெற்களை இழந்த பாகிஸ்தான் 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த நெதர்லாந்து பவர்பிளே முடிவில் 2 விக்கெற்களை இழந்து 50 ர ஓட்டங்கள் எடுத்தது. 13 வது ஓவரில் அணியின் 100 ஓட்டங்களைக் கடந்தது,
நெதர்லாந்து அணி 170 ஓட்டங்களைத் தாண்டும் என எதிர்ப்பார்த்த நிலையில் கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 20 ஓட்டங்களுள் இழந்தது நெதர்லாந்து அணி. இதனால் நெதர்லாந்து 19.5 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக கப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ஒட்டங்களும், பாஸ் டி லீட் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தானின் சார்பாக பர்ஹான் – சையும் ஆயூப் ஆட்டத்தை தொடங்கினர். அதிரடியாக ஆடிய ஆயூப் 13 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கப்டன் சல்மான் அகா 12, பர்ஹான் 47 ஓட்டங்களில் ஆட்ட்மிழந்தனர் அதன்பின்னர், நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.
உஸ்மான் கான் டக் அவுட்டாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கப்டன் பாபர் அசாம் 15, முகமது நவாசும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து பக்கம் போட்டி திரும்பியது. அப்போது, பஹீம் அஷ்ரப் – ஷாகின் அப்ரிடி ஜோடி சேர்ந்தனர். 18வது ஓவர் வரை ஆட்டம் நெதர்லாந்திற்கு சாதகமாக இருந்தது.
வான்பீக் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை அஷ்ரப் சிக்ஸருக்கு அனுப்ப, அடுத்த பந்தை அவர் கேட்சிற்கு கொடுத்தார். அந்த கடினமான கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர் தவறவிட, அதே ஓவரில் அவர் சிக்ஸரும், பவுண்டரியும் விளாச கடைசி 6 பந்துகளில் 6 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
கடைசி ஓவரிலும் அஷ்ரப் பவுண்டரி விளாசி ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு சாதகமாக முடிக்க, பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

