பாகிஸ்தான் நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கக்கூடிய புதிய பயணத் தடையை ட்ரம்ப் நிர்வாகம் அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பை அவர் பாராட்டிய சில நாட்களிலேயே இந்த திடீர் முடிவு வந்துள்ளது.
நாடுகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அபாயங்கள் குறித்த அரசாங்க மதிப்பாய்வின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கான பயணத் தடை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இது அடுத்த வாரம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர, பிற நாடுகளும் பயணத் தடை பட்டியலில் இருக்கலாம்.