பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பருவமழைக்கு மொத்தம் 46 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் வியாழக்கிழமை முதல் பாகிஸ்தானில் மழை தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 393 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஜூன் 26 அன்று பருவமழை தொடங்கியதில் இருந்து மொத்தம் 706 பாகிஸ்தானியர்கள் இறந்துள்ளதாக ஆணையம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான உயிரிழப்புகள் பலத்த மழைக்குப் பிறகு வீடு ,கூரை இடிந்து விழுந்ததாலும், மற்றவை திடீர் வெள்ளம், நிலச்சரிவு, மின்சாரம் தாக்குதல் ,மின்னல் தாக்குதல்களாலும் ஏற்பட்டதாக NDMA தெரிவித்துள்ளது.
பருவமழையால் நாடு முழுவதும் உள்கட்டமைப்பு, தனியார் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூன் 26 முதல், 2,934க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன . 1,108 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. சுமார் 451 கி.மீ வீதிகளும், 152 பாலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன, கைபர் பக்துன்க்வா , பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் ஆகியவை அழிவின் சுமையைத் தாங்கியுள்ளன.
வரும் நாட்களில் மேலும் மழை பெய்யும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர், மேலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்