பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து,பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்தியா முழுமையான தடை விதித்துள்ளது.
இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பாகிஸ்தானில் இருந்து உருவாகும் அல்லது அதன் வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும் என்று வர்த்தக அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
“பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்படும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும், சுதந்திரமாக இறக்குமதி செய்யக்கூடியதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அல்லது கொண்டு செல்வது தடைசெய்யப்படும்.
எந்தவொரு விதிவிலக்குக்கும் அரசாங்கத்தின் முன் ஒப்புதல் தேவைப்படும்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.