
ஹபரணை கல்வாங்குவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.