இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) பெண்கள் விரைவில் விமானப் பணிப்பெண்கள் மட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சீருடை சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்கும்வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
450 சாரதிகளையும், 300 நடத்துனர்களையும்பணியமர்த்துவதற்கான நேர்காணல்கள் நடைபெற்று வருவதாகவும், இதில் பெண் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதற்கட்டமாக, இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பஸ்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள்.