சிங்கப்பூரில் உள்ள பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய தமிழக இளைஞர்கள் 3 பேர் உள்பட 4 பேரை ஹீரோக்களாக அங்கீகரித்த சிங்கப்பூர் அரசு, சமூக உயிர்காக்கும் விருது வழங்கி கௌரவித்தது.
] திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லகம் கிராமத்தை சேர்ந்த சரண் ராஜ் (33), தஞ்சை பட்டுக்கோட்டை எட்டுப்புளிக்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன், புதுக்கோட்டை அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ், பஞ்சாப்பை சேர்ந்த இந்தர்சிங் ஆகிய 4 பேருக்கு விருது வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகள் வளப்படுத்தும் மையம், நியூட்டன்ஷோ கேம்ப் மற்றும் பள்ளி உள்பட 3 மாடி கட்டிடத்தில் நடந்த இந்த விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அதன் அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லகம் கிராமத்தை சேர்ந்த சரண் ராஜ் (33), தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை எட்டுப்புளிக்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ், பஞ்சாப்பை சேர்ந்த இந்தர்சிங் ஆகிய 4 பேர் உள்பட 18 பேர் உடனடியாக விரைந்து செயல்பட்டடனர்.
அவர்கள் தங்களது உயிரை பயணம் வைத்து, தீ விபத்தில் சிக்கிய 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றினார்கள். இதையடுத்து சிங்கப்பூர் நாட்டின் குடிமைத் தற்காப்புப் படை விருது வழங்கி
Trending
- இந்திய எதிர்ப்பால் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சி இரத்து
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்