வத்திகானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனைகள் இன்று நடைபெறும் அதே வேளையில் யாழ்ப்பாணம் மரியன்னை தேவலாயத்தில் நல்லடக்க ஆராதனை கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் ஆண்டகை ஓப்புக்கொடுத்தார். மரியன்னை தேவாலயத்தில் அரைகொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இங்கு யாழ் மறை மாவட்ட பங்குமுதல்வர் கலாநிதி ஜெயரட்ணம், பங்குகுரு முதல்வர்கள், துணை நிலை அருட்சகோகதர்கள்,அருட்சகோதரிகள்,பலரும் கலந்துகொண்டனர்.
