Tuesday, February 18, 2025 9:59 am
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் சம்பந்தமாக உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் (TOT) நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) .க.ஸ்ரீமோகனன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை ]17] றைய தினம் காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிப்பது தொடர்பான தெளிவூட்டல்களை தேர்தல்கள் உதவி ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் முன்வைத்தார்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, மேலதிக தேர்தல் ஆணையாளர் (நீதி) சட்டத்தரணி சிந்தக குலரத்ன, மேலதிக தேர்தல் ஆணையாளர் (நிர்வாகம்) எஸ்.அச்சுதன், யாழ்ப்பாணம், ம் கிளிநொச்சி மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

