ரியாத் ,தெஹ்ரான் ஆகியவற்றுக்கிடையேயான இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கான அடையாளமாக, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஹஜ் யாத்ரீகர்களுக்காக ஈரானில் இருந்து நேரடி விமான சேவையை சவூதி விமான நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.
“சனிக்கிழமை தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி (விமான நிலையம்) இலிருந்து ஈரானிய யாத்ரீகர்களுக்கான விமானங்களை ஃபிளைனாஸ் மீண்டும் தொடங்கியது,” என்று சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார்.
ஈரானில் உள்ள மஷாத்திலிருந்தும் விமானங்கள் சேர்க்கப்படும் என்றும், இதன் மூலம் 35,000 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்கு பயணிக்க முடியும் என்றும்,அந்த விமானங்கள் வணிக ரீதியானவை அல்ல என்றும், ஹஜ் யாத்திரைக்கு மட்டுமே என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஜூன் முதல் வாரத்தில் ஹஜ் பயணம் தொடங்க உள்ளது, உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்கள் ஏற்கனவே சவுதி அரேபியாவிற்குள் நுழையத் தொடங்கியுள்ளனர்.
ஏழு வருட முறிவுக்குப் பிறகு, சீனாவின் தரகு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானும் சவூதி அரேபியாவும் மார்ச் 2023 இல் மீண்டும் உறவுகளைத் தொடங்கின.
சவூதி அரேபியா மதகுரு நிம்ர் அல்-நிம்ரை தூக்கிலிட்டதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களின் போது, தெஹ்ரானில் உள்ள அதன் தூதரகம் மற்றும் வடமேற்கு நகரமான மஷாத்தில் உள்ள துணைத் தூதரகம் தாக்கப்பட்டதை அடுத்து, 2016 ஆம் ஆண்டு சவூதி அரேபியா ஈரானுடனான உறவைத் துண்டித்தது.
2016 ஆம் ஆண்டு, ஈரானிய யாத்ரீகர்கள் யாரும் சவுதி அரேபியாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை, அந்த ஆண்டில் இரு தரப்பினரும் கலந்துகொள்வதற்கான நெறிமுறையை ஏற்பாடு செய்ய முடியாததால், உறவுகள் முறிந்தன.பின்னர் ஈரானியர்கள் புனித யாத்திரையில் சேர அனுமதிக்கப்பட்டனர், ஆனால் ஹஜ் பருவத்தில் ஈரானிய தனி விமானங்கள் மூலம் மட்டுமே சவுதி அரேபியாவுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டன.
ஆனால் மார்ச் 2023 இல் ஈரானிய-சவூதி நல்லிணக்கத்திற்குப் பிறகு, பிராந்திய சக்திகள் தங்கள் தொடர்புகளை தீவிரப்படுத்தியுள்ளன.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!