ட்ரம்பினால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கனக்கான ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கலிபோர்னியா , மேரிலாந்தில் உள்ள கூட்டாட்சி நீதிபதிகள் வியாழக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி, கடந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட தகுதிகாண் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஆறு கூட்டாட்சி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார், பணியாளர் மேலாண்மை அலுவலகத்தால் அவர்களின் பணிநீக்கம் சட்டவிரோதமானது என்றார்.
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் குழு தாக்கல் செய்த சவாலில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி வில்லியம் அல்சப் தனது உத்தரவை பிறப்பித்தார். OPM அல்லது அதன் செயல் இயக்குனர் சார்லஸ் எசெல் ஆகியோருக்கு அனைத்து நிறுவனங்களிலும் பணிநீக்கங்களை இயக்க அதிகாரம் இல்லை என்று அவர் கூறினார்.
இந்த உத்தரவு, முன்னாள் படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, பாதுகாப்பு, எரிசக்தி, உள்துறை மற்றும் கருவூலம் ஆகிய துறைகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.