ஹமாஸிடம் உள்ள பணயக்கைதிகள் சனிக்கிழமை நண்பகலுக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது குறித்து மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்த ஒரு நாள் கழித்து நெதன்யாகுவின் எச்சரிக்கை வெளியானது.
நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவும் இதேபோல ஒரு எச்சரிக்கை விடுத்தது.
திங்கட்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படாவிட்டால் அனைத்து ஓப்பந்தங்களும் முடிவுக்கு கொண்டு வரப்படும் ” என்றார்.