Wednesday, February 4, 2026 4:06 pm
சிங்களம், தமிழ் , ஆங்கில மொழி மூலப்படசாலைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவிப்பின்படி, தற்போது பொது சேவையில் பணிபுரியும் பட்டதாரிகள் பெப்ரவரி 5 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் பிப்ரவரி 19 ஆம் தீகதி இரவு 9.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பொது சேவையில் இல்லாத பட்டதாரிகள் பிப்ரவரி 20 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மார்ச் 5 ஆம் திகதி காலை 9.00 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை தேர்வுத் துறையின் வலைத்தளமான www.doenets.lk வழியாக எங்கள் சேவைகள் → ஆன்லைன் விண்ணப்பங்கள் – ஆட்சேர்ப்பு தேர்வுகள் / E.B. தேர்வுகள் ஆகியவற்றின் கீழ் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

