2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (25) பாராளுமன்றத்தில் 109 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 6:10 மணியளவில் நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் பதிவாகின.
தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன், பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார். வெளிநாட்டுக்குச் சென்ற வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உட்பட நான்கு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.