இலங்கையின் பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டளவில் இராணுவம் 100,000 பணியாளர்களாகவும், கடற்படை 40,000 ஆகவும், விமானப்படை 18,000 ஆகவும் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்தார்.
“அளவு குறைக்கப்படும், ஆனால் படைகள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறும். இந்த மாற்றத்திற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
பல விமானங்களும் ஆயுதங்களும் காலாவதியாகும் தருவாயில் உள்ளன என்பதைக் குறிப்பிட்டார்.
சில கப்பல்களை இயக்குவதற்கு வழக்கமான பயிற்சிக்கு கூடுதலாக சிறப்பு பயிற்சி தேவை என்று கடற்படை வீரர்கள் என்னிடம் கூறியுள்ளனர். கப்பல்கள் மிகவும் பழமையானவை ,சிதைந்தவை. எங்கள் பாதுகாப்புப் பணியாளர்களை தனிநபர்களிடம் அல்ல, தேசத்திற்கு விசுவாசமாக இருக்கும் நிபுணர்களாக மாற்ற விரும்புகிறோம்,” என்று ஜனாதிபதி கூறினார்.
கவனமாக ஆலோசித்த பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இராணுவத் தலைவர்களுக்கு சேவை நீட்டிப்புகளை வழங்கும் நடைமுறையை விமர்சித்ததாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்புப் படைத் தலைவர் பதவி பெரும்பாலும் துணை அதிகாரிகள் அல்லது விசுவாசிகளுக்கு வழங்கப்படுவதாகவும், இதனால் அது பயனற்றதாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.