சட்டவிரோத தடுப்பு முகாம், அதன் நடவடிக்கைகள் தொட்ரபாக ஆராய்ந்த ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 10, ஆம் திகதி நடைபெறும் என பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று கூடிய பாராளுமன்ற அலுவல் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மே மாதத்தில் விவாதத்திற்கு மற்றொரு திகதியை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
படலந்த கமிஷன் அறிக்கையை அவைத் தலைவர் பிமல் ரத்னாயக்க வெள்ளிக்கிழமை, மார்ச் 14 ஆம் திகதி தாக்கல் செய்தார்.