பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களை அதன் நில எல்லைகள் வழியாக கட்டுப்படுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.
நீண்டகாலமாக இந்தியாவுன் கூட்டாளியாக இருந்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கு சுயமாக நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.
ஆடைகள் ,பருத்தி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மர தளபாடங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது. வடகிழக்கு இந்தியாவில் குறைந்தது ஆறு நுழைவு இடங்கலில் இவை தடை செய்யப்பட்டுள்ளன.
புது தில்லியில் இருந்து அதே தரைவழிப் பாதைகள் வழியாக நூல் இறக்குமதியை பங்களாதேஷ்தடை செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது.