யாழ்ப்பாணத்தின் அடையாளமாகிய நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தப் பெருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
25 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் மஞ்சத் திருவிழா , மாம்பழத் திருவிழா , சப்பறம், திருக்கார்த்திகை, பூங்காவனம், சூரியோற்சவம் என்பன சிறப்பான விழாக்களாகும்.
அலங்காரக் கந்தன் என அடியவர்களால் வணங்கப்படும் நல்லூரின் கொடியேற்றம் வானைப் பிளக்கும் அரோகரா ஒலியுடன் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தார்கள். ஓகஸ் 21 ஆம்திகதி தேர்த் திருவிழா நடைபெறும். 22 ஆம் திகதி தீர்த்தத்துடன் மகோற்சவம் நிறைவு பெறும்.
