உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான கார்ல்செனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி பெற்றார் குகேஷிடம் தோல்வியடைந்ததை யை ஏற்க முடியாமல், கார்ல்சன் ஆவேசமடைந்து டேபிளை குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நோர்வே செஸ் 2025 போட்டியின் 6வது சுற்றில் முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை எதிர்கொண்ட குகேஷ், அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசமாக்கினார். தோல்வியை ஏற்க முடியாமல் கார்ல்சன் ஆவேசமடைந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த வெற்றியானது 34 வயதான கார்ல்செனுக்கு எதிரான குகேஷின் முதல் கிளாசிகல் வெற்றி ஆகும். நோர்வேயை சேர்ந்த லெஜண்ட் ஆன கார்ல்சனை அவரது சொந்த மண்ணான ஸ்டாவ்அங்கரில் வீழ்த்தியதால, இந்த வெற்றி குகேஷிற்கு மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு தமிழக வீரரான பிரக்ஞானந்தாவிடமும், கார்ல்சன் தோல்வியுற்று இருந்தது குறிபிடத்தக்கது.