பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் , குளங்கள் ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன, கவுடுல்ல குளத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. மாதுருஓயா மற்றும் குடா ஓயா ஆகியவை நிரம்பி வழிவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக பல பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊவா பரணகமவின் கஹடதலாவ பகுதியில் உள்ள தோட்ட வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.