இந்திய அமுலாக்க நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அன்று அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் அமுலாக்கத்துறை (இடி) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சமர்ப்பித்த கூட்டு நாடுகடத்தல் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை இந்திய அதிகாரிகளுக்கு உறுதிப்படுத்தியது.
2018 ஆம் ஆண்டில் நிதித் துறையை உலுக்கிய இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மோசடி வழக்கில் நேஹல் மோடி முக்கிய குற்றவாளியாக உள்ளார்.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான சட்ட நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.