நாமல் ராஜபக்ஷவின் கிரிஷ் வழக்கில் நீதிபதிக்கு எதிரான ஒன்லைன் கருத்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது குறித்து கொழும்பு உயர்நீதிமன்றம் ஆலோசித்து வருகிறது.
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கை விசாரிக்கும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்னவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இரண்டு பதிவுகள் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்ற பதிவாளர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளார்.
இந்தப் பதிவுகள் பெப்ரவரி 21 ஆம் திகதி “பொட்டல ஜெயந்த”, “சனத் பாலசூரியா” என்ற பெயர்களில் இரண்டு பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இவை நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, உயர் நீதிமன்றப் பதிவாளர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றப் பதிவாளர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் சமீபத்தில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டன.