Tuesday, March 31, 2026 12:36 pm
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கும் விஜய் நீட் கோச்சிங் கொடுக்கும் கல்லூரிக்கு 20 கோடி ரூபா கடன் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மருத்துவ மாணவி அனிதா, நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டத்தை நடத்தி, மருத்துவ சீட் கிடைக்காததால் உயிரை விட்டிருந்தார். இது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அனிதாவின் மரணத்தில் உடைந்து போயிருந்த அவரது பெற்றோரை சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். இது விஜய் மீதான மதிப்பை அதிகரிக்க செய்திருந்தது. ஆனால், நீட் கோச்சிங் கொடுக்கும் கல்வி அறக்கட்டளைக்கு விஜய் கடன் கொடுத்திருப்பதாக, தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
விஜய் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து குறித்து சொல்லியிருந்தபோது, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? என்றும் கேள்வியை எழுப்பியிருக்கிறார். இப்படி இருந்துக்கொண்டே, மறுபுறம் நீட் தேர்வுக்கு கோச்சிங் கொடுக்கும் கல்லூரிக்கு எதற்காக கடன் கொடுக்க வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்னறனர்.
நீட் தேர்வை விஜய் மறைமுகமாக ஆதரிக்கிறாரா? அல்லது சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணம் கட்சி நீட் கோச்சிங் பெற வேண்டும் என்று விஜய் விரும்புகிறாரா? என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

